வேலூர் மலபார் கோல்டில் நகை கண்காட்சி தொடக்கம்

By செய்திப்பிரிவு

வேலூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நகை கண் காட்சி மற்றும் விற்பனை தொடங்கி யுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கலை நயமிக்க நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை வேலூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. நகை கண்காட்சியை நருவி மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் பால் டி ஹென்றி, ராணிப்பேட்டை ராம் லெதர்ஸ் பொதுமேலாளர் மனோகர், வேலூர் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கார்மென்ட்ஸ் வேலு, வேலூர் தாஜ் டவர் ராஜவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த நகை கண்காட்சியில் கலைநயமிக்க அணிகலன்கள், வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘ஏரா’ விலை உயர்ந்த கற்களால் செய்யப் பட்ட ‘பிரீசியா’ போன்ற நகைகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட ‘எத்தினிக்’, பாரம்பரிய இந்திய வடிவமைப்பான ‘டிவைன்’ மற்றும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டார்லெட்’ போன்றவையும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. அழகிய நகை களை சிறப்பு சலுகையில் வாங்கலாம். சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளு படியும் வழங்கப்படுகிறது.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், உலகில் 10 நாடுகளில் 270-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், நெல்லை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாத புரம், தருமபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் 15 கிளைகளை கொண்டுள்ளது.

நகை கண்காட்சி ஜனவரி 15-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை நடைபெறும். அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு மற்றும் விலையை எளிதாக தெரிந்துக் கொண்டு நகைகளை வாங்கலாம்.

வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்திரவாதம் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மலபார் கோல்டு நிறுவனம் வணிகத்துடன் சமூக பொறுப்பு திட்டங்களுக்கும் செலவிடுகிறது’’ என தெரிவித் துள்ளனர்.

நகை கண்காட்சி திறப்பு விழாவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வேலூர் கிளை தலைவர் அனீஸ் ரகுமான், துணைத்தலைவர் முகமது சச்சின், நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்