இறைவணக்கம், விளையாட்டு வகுப்புகள் நடத்த தடை வரும் 19-ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு சிஇஓ உத்தரவு

By செய்திப்பிரிவு

பள்ளிகள் திறக்கப்பட்டதும் இறை வணக்கம், விளையாட்டு வகுப்பு களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் வரும் 19-ம் தேதி முதல் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் குணசேகரன், தலைமை ஆசிரி யர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிகள் மூடப் பட்டன. 12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, கரோனா தொற்று அதிகரித் ததால் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் 8 மாதங்களாகியும் திறக் கப்படாமல் இருந்தது. இந்நிலை யில், பொங்கல் பண்டிகைக்கு பிறகுபள்ளிகளை திறக்கலாமா ? என்ற கருத்துக்கேட்பு கூட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட் டது. இதில், பெரும்பாலான பெற்றோர் மாணவர்களின் நலன் கருதி பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என கருத்து தெரிவித்தனர். பெற் றோர் ஆசிரியர் கழகமும் ஒரு மித்த கருத்தை தெரிவித்தது.

அதன்படி, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19-ம் தேதி, முதற் கட்டமாக 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என் றும், அரசின் வழிகாட்டு நெறிமுறை களை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்பற்ற வேண் டும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், வேலூர் மாவட் டத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோ சனைக்கூட்டம் வேலூர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற் றது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘வரும் 19-ம் தேதி பள்ளிகளைதிறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டும். மாணவர்கள் யாருக் கேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டி ருப்பது தெரியவந்தால் அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது,உடனடியாக வீட்டுக்கு அனுப்பி,பெற்றோர் மூலம் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும்.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாண வர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என அரசு அறிவுறுத் தியுள்ளது. இருப்பினும், அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடம் எடுக் கும்போது மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் வெளியே வராமல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு வகுப்பறை யிலும் சானிடைசர், நோய் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும். மாணவர்கள் மட்டு மின்றி ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.வகுப்பறையில் 6 அடி இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க வேண்டும்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்னால் பள்ளி வளாகம் மற்றும் கழிவறைகளை தூய் மைப்படுத்த வேண்டும். மாண வர்களுக்கான குடிநீர், உணவு ஆகியவற்றை மாணவர்களே வீட்டில் இருந்து கொண்டு வர ஆசிரியர்கள் அறிவு றுத்த வேண்டும். மாணவர்கள் உணவு இடைவெளியின் போதும் மற்றும் நேரங்களில் ஒன்று கூடுவதை எக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.

இறைவணக்கம், விளையாட்டு வகுப்பு, உடற்கல்வி உள்ளிட்டவை களை நடத்தக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்ள நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை மூட வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை ஒவ்வொரு பள்ளியிலும் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்