பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.19.68 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 19 கோடியே 68 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை யாகியுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், வேலூர் மண்டலத்தில் வேலூர், திருப் பத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் 112 கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் கடந்த 13-ம் தேதி ரூ.4 கோடியே 89 லட்சத்துக்கு மதுபானபாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. 14-ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தன்று ரூ.6 கோடியே 79 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டாஸ்மாக் மண்டலத்தின் கீழ் 88 கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 13-ம் தேதி ரூ.2 கோடியே 70 லட்சத்துக்கு மதுபான பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன.

14-ம் தேதி ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரி 15-ம் தேதி திருவள் ளுவர் தினத்தை யொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், 14-ம்தேதியே மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபான பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி கடந்த 13-ம் தேதி மற்றும் 14-ம் தேதி ஆகிய 2 நாட்களில் ரூ. 19 கோடியே 68 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை யாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்