கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஈரோட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ரத்து

By செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு ஈரோட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், பெரும்பாலான மாவட்டங்களில் விதிகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த மாநில அரசு அனுமதி அளித்தது.

இதனையடுத்து ஈரோட்டில் ஜல்லிக்கட்டுப் பேரவை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில், 2019-ம் ஆண்டு ஈரோடு பவளத்தான் பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 523 காளைகள் பங்கேற்றன. ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இந்த ஆண்டு ஈரோட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஜல்லிக்கட்டுப் பேரவையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏமாற்றமடைந் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்