மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உற்சவர் நம்பெருமாள் நேற்று தங்கக் குதிரை வாகனத்தில் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார்.
பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நாட்களில் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடைபெறுவது வழக்கம்.
இந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபநாச்சியார்கள் உடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார். நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 6 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு கனுமண்டபம் வந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. பின்னர் பகல் 1 மணியளவில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பாரிவேட்டை நடத்தியபடி ரங்கா ரங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ரங்க விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அறங் காவலர்கள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago