திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகா தாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசின் நடவடிக்கைகளால் தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் சுணக்கம் உள்ளது.
இவ்வாறு நடந்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். கரோனா பாதிப்பு குறைந்தாலும் முகக்கவசம் அணிவது அவசியம். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் கரோனா மீண்டும் பரவுவதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றாதததே காரணம் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, சுகாதாரத் துறை இணை இயக்குநர் லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago