ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளை 3 நாட்களுக்கு மூட வேண்டும் என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதையொட்டி இயங்கி வரும் மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகங்களில் இயங்கி வரும் மதுபான பார்கள் ஜனவரி 15-ம் தேதி (நாளை) (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்), ஜனவரி 28-ம் தேதி (வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாட் களுக்கு மூடவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துடாஸ்மாக் மதுபானக் கடை களும், அதையொட்டி இயங்கி வரும் மதுபான பார்களும் மேற்கண்ட நாட்களில் மூடாமல் திறந்து வைத்து மதுபானங் களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடையின் கண்காணிப்பாளர், விற்பனை யாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், மதுபான பார்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் பார் உரிமையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago