தமிழகத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாஹேப் வலியுறுத்தியுள்ளார்.
இவர் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் தன் குடும்பத்தினருடன் வழிபாடு செய்ய வந்தார். அவருக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிபாட்டுக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையை புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையிலும் தங்கத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் நாடு முழுவதும் தங்கப் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago