புதுச்சேரி ஆளுநர் மாளிகையை சுற்றிலும் சாலைகள் மூடல் தடுப்பு வேலி, நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்பு பொதுமக்கள் நடமாட கடும் கெடுபிடி - பாரதி பூங்கா செல்ல தொடர்ந்து தடை

By செ.ஞானபிரகாஷ்

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டாலும், தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. மூன்று அடுக்கு தாண்டி தற்போது 7 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

அதிக அச்சுறுத்தல் உள்ள பகுதி போல் சாலையில் தடுப்புகளில் இரும்பு கம்பிகளும் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டப்பேரவை சாலைகளும் மூடப்பட் டுள்ளன. முக்கியமாக ஒயிட் டவுனில் உள்ள மணக்குள விநா யகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் செல்லும் பக்தர்களுக்கு கெடுபிடி இருக்கிறது.

இதுதொடர்பாக வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் கூறுகையில், "புதுச்சேரியில் சாலைகள் மிக அழகாக இருக்கும். கடற்கரை அருகே நிறைவடையும் இச்சாலைகளில் பயணிப்போம். தற்போது கடற்கரை செல்லும்பல சாலைகள் மூடி கிடக்கின்றன. தடுப்புகளும், மத்திய துணை ராணுவப்படையினர் ஆயுதங்க ளுடனும், சுற்றி லும் போலீஸாரும் என நிரம்பி யிருக்கின்றனர். இதைப் பார்க்க கொடுமையாக உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

குறிப்பாக ராஜ்நிவாஸ்- சட்டப் பேரவை அருகே அமைந்துள்ள அரசு பொதுமருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு யாராலும் வரமுடியாத சூழலும் ஏற்பட்டு விட்டதாக நகரப்பகுதியை ஒட்டி யுள்ள குருசுக்குப்பம் மக்கள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர். "எளிதாக ஒரே சாலையில் அரசுமருத்துவமனைக்கு வருவோம், தற்போது சுற்றி வரவேண்டியுள்ளது" என்கின்றனர் சோகத்துடன்.

"ராஜ்நிவாஸை ஒட்டியுள்ளது ரோமன் ரோலண்ட் நூலகம். இந்த நூலகத்துக்கு வந்து செல்வதே இப்போது பெரும்பாடாகி விட்டது. புத்தகம் படிக்கும் ஆசையை விட முடியாததால் பல சிரமங்களுக்கு இடையில் வருகிறோம்" என்கின்றனர் புத்தக ஆர்வலர்கள்.

சட்டப்பேரவைக்கு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவோ, அதிகாரிகளை பார்க்க வருவதோ முற்றிலும் நின்று போய்விட்டது.

இப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் நிலையோ இன்னும் மோசமாகிவிட்டது. "கரோனாவுக்கு பிறகு தற்போதுதான் சுற்றுலா தொடங்கியது. தற்போது மீண்டும் தடுப்புகள், பாதுகாப்பு என மக்கள் யாரும் வராததால் வியாபாரமே இல்லை" என்கின்றனர் கோபத்துடன்.

குழந்தைகளும், நடைபிரியர் களும் மிகவும் நேசிக்கும் பாரதிபூங்கா காலவரையன்றி மூடப்பட்டுள்ளது. மக்களுக்கான சட்டப்பேரவை, ராஜ்நிவாஸ், தலைமைச்செயலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள சாலைகள் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. மக்கள் பாதிப்பு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "உயர் அதிகாரிகளை அழைத்து இதுபற்றி பேச உள்ளேன்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்