விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முறைகேடு?

By செய்திப்பிரிவு

பொங்கல் திருநாளை சிறப்பாககொண்டாடும் விதமாக அரசு சார்பில் ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள1,254 நியாயவிலைக் கடைகளில் 5,88,058 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு தனித்தனியே வழங்கப் பட்டுவருகிறது.

சில கடைகளில் பணம் வாங்காதவர்களுக்கும் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. சிலருக்கு பணம் மட்டும் அளித்துவிட்டு சிறப்பு பரிசு தொகுப்பை பிறகு வாங்கிக்கொள்ளுங்கள் என்று காலம் தாழ்த்துவதாகவும் புகார்கள் வந்தன.இதுகுறித்து மாவட்டவழங்கல் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, " ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. சில கடைகளில் இந்தநடைமுறையில் சாத்தியப்படவில்லை. இம்மாதம் மட்டும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பழைய முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர். மேலும் விவரம் அறிய மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரனை பலமுறை தொடர்புகொண்டும் பதில் பெறமுடியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்