ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கரோனா தொற்றுக்கான தடுப்பூசி ஒத்திகை நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்கட்டமாக தடுப்பூசி போடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போடுவதற்காக கண்டறியப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தடுப்பூசி ஒத்திகை நடந்த, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, சிறுவல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை (கேர் 24) ஆகிய 7 இடங்களில், வரும் 16-ம் தேதி கரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு பின்னர் மீண்டும் ஒரு ஊசி போடப்படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago