தொடர் மழையால் பொதுமக்கள் அவதி மணமேல்குடியில் 90 மி.மீ பதிவு

By செய்திப்பிரிவு

திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, சாலையோர உணவகத்தினர், தள்ளுவண்டி கடையினர், தரைக் கடையினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

திருச்சி நகரம் 22.20, விமானநிலையம் 24.40, துவாக்குடி, நவலூர் குட்டப்பட்டு, வாத்தலை அணைக்கட்டு தலா 22, நந்தியாறு தலைப்பு 21.60, மருங்காபுரி 20.60, திருச்சி ஜங்ஷன் 20, மணப்பாறை 19.20, புள்ளம்பாடி 19, பொன்மலை 17.10, பொன்னணியாறு அணை 16, லால்குடி 15.30, தென்பரநாடு 15, சமயபுரம் 14.20, கல்லக்குடி 14.30, முசிறி 14, கோவில்பட்டி 13.20, தேவிமங்கலம் 13, புலிவலம் 12.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):

மணமேல்குடி 90, ஆயிங்குடி 88, நாகுடி 86, அறந்தாங்கி 69, மீமிசல் 62, ஆவுடையார்கோவில் 58, கறம்பக்குடி 51, கீழாநிலை 44, மழையூர் 42, ஆலங்குடி 41, பெருங்களூர் 35, கீரனூர் 34, ஆதனக்கோட்டை 33, கந்தர்வக்கோட்டை 30, திருமயம், குடுமியான்மலையில் தலா 24, விராலிமலை, அன்னவாசலில் தலா 23, இலுப்பூர் 22, புதுக்கோட்டை 20, அரிமளம், உடையாளிப்பட்டியில் தலா 16, காரையூர் 13, பொன்னமராவதி 10.

கரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): அரவக்குறிச்சி 30, பாலவிடுதி 20, மைலம்பட்டி 17, கடவூர் 12, பஞ்சப்பட்டி 10.50, அணைப்பாளையம் 9, கிருஷ்ணராயபுரம் 7.20, குளித்தலை மற்றும் மாயனூர் தலா 7, கரூர் 6.40, க.பரமத்தி 3.60, தோகைமலை 3.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்