கடலூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான நெற் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக முஷ்ணம் அருகே உள்ள வானமாதேவி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. சிதம்பரம், காட்டு மன்னார்கோவில்,பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தொடர்மழை காரணமாக அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய மழையளவு: புவனகிரியில் 105 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 92.8 மி.மீ, அண்ணாமலைநகரில் 69.2 மி.மீ, காட்டுமன்னார்கோவிலில் 53 மி.மீ, லால்பேட்டையில் 53 மி.மீ, சிதம்பரத்தில் 30 மி.மீ, வேப்பூரில் 22 மி.மீ, விருத்தாசலத்தில் 18 மி.மீ, முஷ்ணத்தில் 15 மி.மீ, கடலூரில் 12 மி.மீ மழை பெய்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago