நீட் ஆள் மாறாட்ட வழக்கில் பிஹார் இடைத்தரகர்களுக்கு தொடர்பு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து தேனி சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக 7 மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர்கள் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கேரள இடைத்தரகர் ரஷீத் கடந்த 7-ம் தேதி தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை 21-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இந்நிலையில் ரஷீத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இதன்பேரில் மூன்று நாள் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் ரஷீத்தை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணை முடிந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் இவரை நேற்று மாலை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், இந்த வழக்கில் இவருக்கு மட்டுமல்லாது பிஹார், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள இடைத்தரகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்