திருச்சி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு 10 இடங்களில் கரோனா தடுப்பூசி இடும் திட்டம் ஜன.16-ம் தேதி தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர் களுக்கு கரோனா தடுப்பூசி இடும் திட்டம் ஜன.16-ம் தேதி 10 இடங் களில் தொடங்கப்படவுள்ளது.

கரோனா தடுப்பூசி இடுவது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை யில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் ஒருங் கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசியது: தமிழகத்தில் முதல் கட்டமாக மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர் களுக்கு கரோனா தடுப்பூசி இடப்படவுள்ளது.

இதற்கான கோவிட் செயலியில் அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் 5,542 பேரின் விவரங் கள் முழுமையாகவும், தனியார் மருத்துவமனைகளில் பணியாற் றும் 7,000 பேரில் 6,553 பேரின் விவரங்களும் பதிவு செய்யப்பட் டுள்ளன. மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் 3,126 பேரில் 2,874 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 நாட்களில் எஞ்சிய பணியாளர்களின் விவரங் கள் பதிவு செய்யப்படும்.

இந்தநிலையில், அரசின் அறிவிப்பின்படி ஜன.16-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இடும் திட்டம் தொடங் கப்படவுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரங்கம், லால்குடி, முசிறி அரசு மருத்துவமனைகள், இனாம் குளத்தூர், புத்தாநத்தம் ஆகிய இடங்களில் உள்ள மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ராமலிங்கநகர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அப் போலோ மருத்துவமனை ஆகிய 10 இடங்களில் மருத்துவப் பணியா ளர்கள் தலா 100 பேருக்கு கரோனா தடுப்பூசி இடப்படவுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவம்- ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மாவட் டத்தில் கரோனா தடுப்பூசி இடப்படும் பணியை ஒருங்கி ணைப்பது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடை பெற் றது. கூட்டத்தில், அவர் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 91 அரசு மருத்துவமனைகளில் 4,587 பேருக்கும், 378 தனியார் மருத்துவமனைகளில் 1,489 பேருக்கும், இவர்களுடன் மேலும் 773 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 6,849 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படவுள்ளன. ஏற்கெனவே, மாவட்டத்தில் 10 இடங்களில் தடுப்பூசி போடுவது குறித்த ஒத்திகை நடத்தப் பட்டுள்ளது என்றார். கூட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி, சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்