விராலிமலை தொகுதியில் பித்தளை பானையுடன் பொங்கல் பரிசு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது சொந்த செலவில் அனைத்து குடும்பங்களுக்கும் பித்தளை பானையுடன் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அதில், விஜயபாஸ்கர் படத்துடன் ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என அச்சிடப்பட்ட துணிப்பையில், அரிசி, வெல்லம், நெய், உலர் திராட்சை, முந்திரி பருப்பு, கரும்பு போன்றவற்றுடன், அட்டைப் பெட்டியில் பித்தளை பானை, கரண்டி ஆகியவை உள்ளன. இந்த தொகுதிக்குட்பட்ட நாங்குப்பட்டி, ராப்பூசல், கீழக் குறிச்சி, பரம்பூர், செல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோ கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் இந்தப் பரிசுப் பொருட்களை விநியோகித்து வரு கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்