திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ப வர்களிடமிருந்து மாதந்தோறும் மாமூல் தொகையை பெற்று அனைவரும் பங்கிட்டுக் கொள் வதாக திருச்சியிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், இந்த மாதத் துக்கான மாமூல் தொகையை அங்குள்ள போலீஸார் நேற்று பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்தி ருந்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, நவநீதகிருஷ்ணன், சக்திவேல் உள்ளிட்டோரைக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் நேற்று திடீரென முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த ரூ.1,80,850-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் லதா, 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 5 காவலர்களிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கூறும்போது, ‘‘மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் சிக்கியுள்ள பணம், சட்ட விரோத மது விற்பனை யாளர்களிடமிருந்து மாமூலாக வசூலிக்கப்பட்ட தொகை என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago