மத்திய அரசு தமிழைத் தொடர்ந்து புறக்கணிக்கிறது என்று திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.
திருச்சிக்கு நேற்று வந்த அவர், ராஜா காலனி பேருந்து நிறுத்தம் அருகே கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, நத்தர்ஷா பள்ளிவாசலில் வழிபாடு நடத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசு தமிழைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கிறது. அந்தந்த மாநில மொழிகளில் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு மத்திய அரசு பெரும் தடையாக உள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை காங்கிரஸ்- திமுக இடையே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றார்.
தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், இரு கட்சிகளும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “இதை திமுகதான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago