தென்காசி மாவட்டத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை கோயில்கள் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, திருப்பாவை மற்றும் திருவெம்பாவைப் பாசுரங்களைப் பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற்றது. போட்டியை அறநிலையத் துறை உதவிஆணையர் சங்கர் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பண்ணோடு பாடுதல் போட்டியில், இலஞ்சி பாரத் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீவர்ஷிணி, பாரத் மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி கோதண்டராமன், திருமலைக் குமாரசாமி தேவஸ்தானப் பெண்கள் பள்ளி மு.மாலதி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
ஒன்பம் வகுப்பு முதல் 12-ம்
வகுப்பு வரை நடைபெற்ற போட்டியில் ராமாலயம் திருமலைக்குமாரசாமி தேவஸ்தான பெண்கள் பள்ளி புஷ்பகலா, சங்கரன்கோவில் சேனைத்தலைவர் பள்ளி லெட்சுமணக்குமார், ராமாலயம் திருமலைக்குமாரசாமி பள்ளி மாணவி திவ்யா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கட்டுரைப் போட்டியில், வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் மேல்நிலைப்பள்ளி அமுதபாரதி, முத்துபிரபா, இலஞ்சி பாரத் மாண்டிசோரி சாய்ராம் ஆகியோர் முதல்3 இடங்களை பிடித்தனர். ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான கட்டுரைப் போட்டியில் மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மகேஸ்வரி, இடைகால் மீனாட்சி சுந்தரம் நினைவு மேல்நிலைப்பள்ளி ராஜேஸ்வரி, இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி அஜிதா காயத்ரி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
பரிசுகளை பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் உதவிஆணையர் அருணாசலம் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை காசிவிஸ்வநாதசுவாமி கோயில் செயல்அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago