கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் ஜியா வுல்ஹக்அலுவலகத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மேற்பார்வையில், கரியாலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், கரியாலூர் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் கல்வராயன் மலை பகுதியில் சாராய ஊறல்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.
வெதூர் கிராமத்தில் உள்ள தெற்கு ஓடையில், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் சாராய ஊறல்கள் 6 பேரல்களில் தலா 200 லிட்டர் வீதம் 1,200 லிட்டர் ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊறலின் உரிமையாளரை பற்றி விசாரித்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
பின்பு சாராய ஊரல்களை சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago