சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:
சேத்தியாதோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஜனவரி 3-ம் தேதி கரும்பு அரவை தொடங்கப்படும் என்று ஆலை நிர்வாகம் அறிவித்தது. கரும்பினை வெட்டி ஏற்றி வந்த விவசாயிகளின் கரும்பினை இதுநாள் வரை அரைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு இதேபோல் தொழில்நுட்ப கோளாரால் ஆலை இயங்காமல் ஆலை நிர்வாகத்திற்கு ரூ.8 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கெல்லாம், தலைமைப்பொறியாளர் மற்றும் பொறியா ளர்களின் திறன்மை யின்மை, பராமரிப்பு பணிகளிலும், கொள் முதலிலும் குளறுபடிகள் தான் காரணம் என்று தெரிய வருகிறது.
ஆலையை இயக்காமல் நஷ்டகணக்கு காட்டி ஆலையை ஒட்டு மொத்தமாக மூடுவதற்கு முயற்சி செய்யும் ஆலை நிர்வாகத்தையும், தமிழக அரசையும், ஆலையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை யையும் கண்டிக்கிறேன். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள், ஓட்டுநர்களும் இணைந்து மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில், மிகப் பெரிய போராட்ட களமாக மாறக் கூடிய சூழலுக்கு தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. விவ சாயிகள் நலன் கருதி உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்த நேரிடும் என்று தெரி வித்துள்ளார்.
விவசாயிகள் நலன் கருதி உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அனைத்து கட்சிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்த நேரிடும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago