நெய்வேலி வடக்குத்து பகுதியில்விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை (என்எச்45சி) திட்ட இயக்குநர் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.
நெய்வேலி சட்டமன்ற உறுப்பி னர் சபா ராஜேந்திரனிடம் அப்பகுதிபொதுமக்கள் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலை திட்டப் பணியில் உள்ள பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர். இதில்,வடக்குத்து ஊராட்சி மேல் வடக்கு மயானம் தண்ணீர் நிரம்பி உள் ளதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. மயான நிலத்தை சமன்படுத்தி தரவேண்டும். வடக்குத்து ஊராட்சி நெடுஞ்சாலைக்கு மேல்புறம் உள்ள ஓடை, சாலை விரிவாக்கப் பணியில் மூடப்படுகிறது. இதனால் வடபுறத்தில் இருந்து வரும் வெள்ள நீர், வடக்குத்து ஜடாமுனி கோயில் தெரு, பிள்ளையார் கோயில்தெரு பகுதிகளில் தண்ணீர் வீட்டுக்குள் புகுவதை சரி செய்யும் வகையில் வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும்.
இந்திராநகர் ஊராட்சி நுழைவாயிலில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும். பாவை குளம் கிராமத்தில் மேம்பாலம் அமைத்தல் வேண்டும் ஆகியவை குறித்த மனுவை அளித்தனர்.
மனுக்களை பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் மனுக்களை விக்கிரவாண்டி- கும்ப கோணம் தேசிய நெடுஞ்சாலையின் திட்ட இயக்குநர் உதயசங்கருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று வடக்குத்து பகுதியில் விக்கிரவாண்டி- கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலையின் திட்ட இயக்குநர் உதயசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் ஆகியோர் பிரச்சினைகள் உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்ட இயக்குநர் தெரிவித்து சென் றார்.
ஒன்றிய திமுக பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடேசன், வடக் குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, நெய்வேலி நகர பொறுப்பாளர் பக்கிரிசாமி, திராவிடர் கழக மணிவேல், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago