நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றுகொள்ளிடம் கீழணை பாசன விவ சாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
காட்டுமன்னார்கோவில் வட்டத் தில் நேரடி நெல் விதைப்பு செய்து இரண்டு புயலால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்த பயிர்கள் தற்போது அறுவடை நடந்து வருகிறது.பனி பெய்யக் கூடிய ஜனவரி மாதத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் அறிவிக் கப்பட்ட அனைத்து இடங்களில் உடனே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
இல்லை என்றால் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரித்து விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற நேரிடும் என்று தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago