பறவைக் காய்ச்சல் பீதியை போக்க முட்டை, சிக்கன் மேளா கோழிப்பண்ணையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு

By செய்திப்பிரிவு

முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை சமைத்து மக்களுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் பேசினார்.

வட மாநிலம் மற்றும் கேரளாவில் நிலவி வரும் பறவைக் காய்ச்சல் பீதியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை வர்த்தகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:

தீவன மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அவற்றை பண்ணையாளர்களுக்கு வழங்கவும், தீவனங்களை ஆய்வு செய்வதற்காக நவீன பகுப்பாய்வுக் கூடம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. முட்டை விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ஓரளவு குறைத்து விற்பனை செய்யலாம். வியாபாரிகள் வலியுறுத்தலுக்காக விலை குறைப்பில் ஆர்வம் காட்டினால் பண்ணையாளர்கள் தான் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

பொதுமக்களிடையே முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சங்க உறுப்பினர்களின் பண்ணை களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டை, கோழிகளை பெற்று அவற்றை சமைத்து மக்களிடையே கொடுத்து இவற்றால் எவ்வித பாதிப்புமில்லை என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கோழிப் பண்ணை யாளர் சங்க அலுவலகம் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் முட்டை, கோழி இறைச்சியை பல்வேறு சுவைகளில் தயாரித்து விற்பனை செய்யும் வகையிலான உணவகம் கட்டப்பட உள்ளது, என்றார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் பேசும்போது, பறவைக் காய்ச்சலால் கோழிப்பண்ணைத் தொழில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பண்ணையாளர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பண்ணைகளை தூய்மையாக வைத்திருக்கவும், நோய்த் தொற்று ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வும் வேண்டும், என்றார்.

சங்க முன்னாள் தலைவர் நல்லதம்பி, செயலாளர் சுந்தரராஜன், கால்நடை மருத்துவர் சந்திரசேகர் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்