கொமதேக வலிமைக்கு தகுந்தபடி தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் கொமதேக மேற்கு மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் சாயக்கழிவு பிரச்சினை, ஐடிபிஎல் திட்டம், உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு, நூல் விலையேற்றத் தால் ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி என பல பிரச்சினைகள் உள்ளன. எனினும், இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த அறிவிப்பை யும் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் கொமதேக தனித்தும், தனிச்சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என முதல்வர் பேசி இருக்கிறார். ஆனால், இன்னும் சில நாட்கள் பொறுத்து இருந்தால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் இருக்குமா? இருக்காதா? என்பது தெரியவரும்.

திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. கடந்த காலங்களில் கொமதேக 72 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டுள்ளது. 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை கொண்டுள்ளது. கொமதேகவின் வலிமையை கூட்டணி தலைமை புரிந்துகொண்டிருக்கிறது. எங்களுடைய வலிமைக்கு தகுந்தவாறு தொகுதிகளை கேட்டுப்பெறுவோம், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்