நெடுஞ்சாலைத் துறையில் தனியார் மயத்தை கைவிட வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 7-வது மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்துகொண்ட மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், செய்தியாளர்களிடம் கூறியது: நெடுஞ்சாலைத் துறை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே மேற்கொள்ள வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக சேர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளர் பணி வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டந்தோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறு. ஜன.30-ம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில், குடும்பத்துடன் சென்னையில் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான தேதியை விரைவில் முடிவு செய்ய உள்ளோம். எனவே, எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்