20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி தேசிய செட்டியார்கள் பேரவை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேசிய செட்டியார்கள் பேரவை யின் மகளிர் மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது.

இம்மாநாட்டில் பங்கேற்ற பேரவையின் நிறுவனர் தலைவர் பிஎல்ஏ.ஜெகநாத் மிஸ்ரா, செய்தி யாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள செட்டியார் சமூக மக்களுக்கு பாதுகாப்பு, அரசியல் முக்கியத்துவம் கிடைப் பதற்காக, இச்சமூகத்தில் உள்ள 100-க்கும் அதிகமான உட்பிரிவு களை ஒன்றிணைத்து தேசிய செட்டி யார்கள் பேரவையை நடத்தி வருகிறோம். இந்த அமைப்பில் இதுவரை ஆன்லைனில் மட்டும் 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இம்மாநாட்டைத் தொடர்ந்து, பிப்.21-ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மாநாடு நடத்தவுள்ளோம். நாங்கள் பல ஆண்டுகளாக அதிமுக கூட்டணி யில்தான் இருந்து வருகிறோம். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், எங்கள் பேரவைக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியு டன் கூட்டணி வைத்து போட்டி யிடுவோம். இல்லையெனில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்.

கண்ணகிக்கு மதுரையில் மணி மண்டபத்தையும், தேனி மாவட்டம் கம்பம் லேயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோட்டத்தையும் அமைக்க வேண்டும். பூம்புகாரில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று கண்ணகி விழாவை நடத்த வுள்ளோம் என்றார்.

அப்போது, அமைப்பின் வர்த்தக அணி மாநிலத் தலைவர் சி.என்.சரவணன், பொருளாளர் ஜி.கணேசன், கவுரவத் தலைவர் ஏ.ஜெயராமன், தலைமை ஒருங்கி ணைப்பாளர் எஸ்.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, மகளிர் மாநாட் டில், “ஆன்லைன் மருந்து வணிகத் துக்குத் தடை விதிக்க வேண்டும். வங்கிகள் வழங்கும் பொருளாதாரக் கடன், வியாபாரக் கடன், விவசாயக் கடன் ஆகியவற்றில் 50 சதவீதத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிரணி நிர்வாகிகள் ராஜேஸ்வரி, கீதா, முத்துமீனா, முத்துலட்சுமி, மஞ்சு கஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்