தமிழக ஆசிரியர் கூட்டணியின் சிறப்பு மாநில தேர்தல் பொதுக் குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
இதில், அமைப்பின் மாநிலத் தலைவராக மா.நம்பிராஜ், பொதுச் செயலாளராக அ.வின்சென்ட் பால்ராஜ், பொருளாளராக க.சந்திர சேகர், துணைத் தலைவர்களாக ஆ.எழிலரசன், பா.கனகராஜ், துணைப் பொதுச் செயலாளராக அ.தமிழ்ச்செல்வம், மாநில துணைச் செயலாளர்களாக ஆ.ராஜசேகர், சே.கணேசன், மகளிரணிச் செயலாளராக ரமா ராணி, தலைமை நிலையச் செயலாளராக தா.ச.ரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தில் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்ட அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறியது:
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகளைத் திறந்து, 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த வேண்டும். இனியும் பள்ளிகளை திறக்காவிடில் குழந்தைகளின் கல்வி பாதிக்கும்.
2019-ல் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கள், அரசு ஊழியர்கள் 5,068 பேருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இதில், பணி ஓய்வு பெற்ற 42 பேர் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின் றனர். மற்றவர்களுக்கு பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இதேநிலை தொடர்ந்தால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் எதிர்ப்பு சட்டப் பேரவைத் தேர்தலில் எதிரொலிக் கும்.
எங்களைப் பழிவாங்குவது தொடர்ந்தால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago