மத்திய அரசை எதிர்க்கும் துணிவு அதிமுக அரசுக்கு இல்லை ப.சிதம்பரம் கருத்து

By செய்திப்பிரிவு

மத்திய அரசை எதிர்க்கும்‌ துணிவு அதிமுக அரசுக்கு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று நடை பெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அரசு குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசை எதிர்க்கும்‌ துணிவு அதிமுக அரசுக்கு இல்லை.

நாளிதழ்களில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றனர். ஜன.27-ம் தேதி மற்றொரு சம்பவம் நடக்கவுள்ளது. அதன்பின் இவர்களுக்கிடையே போட்டி இன்னும் சூடு பிடிக்கும். அதிமுக அரசியலானது சினிமா போல நடக்கவுள்ளது.

மனிதாபிமானம், மனிதநேயம் இல்லாத‌, முரட்டுத்தனமான‌ அரசாக பாஜக அரசு உள்ளது. தேர்தலையே விலைக்கு வாங்கக் கூடிய அளவுக்கு பாஜகவினர் உள்ளனர். பணபலமிக்க பாஜக, அதிமுக கூட்டணியை எதிர்த்து திமுக கூட்டணி மனித பலத்தை வைத்து வெற்றி பெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்