திருப்பத்தூர் அருகே கோவிலூர் கிராமத்தில் சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் பொது மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி திருப்பத்தூர் - புதுக்கோட்டை சாலையில் காலிக் குடங்களுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கோவிலூர், சவுளூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் எங்களுக்கு செய்துத் தரப்பட வில்லை.

கோவிலூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், கோவிலூர் கிராமத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தோம்.

ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித் தும், சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

பொதுமக்களின் மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டதை தொடர்ந்து, திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில், உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்தனர். அதன்பேரில், 2 மணி நேரத்துக்கு பிறகு மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதன்பிறகு டிராக்டரில் கோவி லூர் கிராமத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்