விழுப்புரத்தில் பெண் காவலர்களுக்கு இலவச புற்றுநோய் தடுப்பு முகாம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் காவல்துறை சிறார் மன்றம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் துறை இணைந்து பெண் காவலர்களுக்கான இலவசபுற்றுநோய் பரிசோதனை சிறப்புவிழிப்புணர்வு முகாமை நேற்றுவிழுப்புரம் வி.ஆர்.பி மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.

இம்முகாமை ஆட்சியர் அண் ணாதுரை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில், பெண் காவலர்களுக்கு புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இந்த முகாமில் ரத்த அழுத்தம், இதய மின்துடிப்புப் பதிவு,ரத்தப் பரிசோதனை, மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இம் முகாம் இன்றும் நடைபெறுகிறது.

முகாமில் பங்கேற்றவர்களில் எவருக்கேனும் புற்றுநோய்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்சிகிச்சைக்காக அடையாறு சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சிமருத்துமனையில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படுவார்கள்.

இம்முகாமில் எஸ்பி.ராதா கிருஷ்ணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்