சவுண்டம்மன் கோயில் திருவிழா முகூர்த்தக்கால் நட்டு தொடக்கம்

By செய்திப்பிரிவு

குமாரபாளையம் சவுண்டம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற சவுண்டம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சமயத்தில் சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு மற்றும் மகா ஜோதி என மூன்று நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கோயில் திருவிழா வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் சக்தி அழைப்பு, சாமுண்டி அழைப்பு மற்றும் மகா ஜோதி திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடுதல் விழா ராஜா வீதி சவுண்டம்மன் கோயிலில் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்