தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

விவசாயிகள் குறைதீர் கூட்டம், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆகியவற்றை வழக்கம்போல நடத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பெரம் பலூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் உத்தரவின்படி தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், மின் வாரிய நுகர் வோர் குறைதீர் கூட்டம், பொது மக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் போன்றவை கரோனா தொற்று பரவல் காரணமாக முறையாக நடைபெறவில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டம் மட்டும் காணொலி வாயிலாக நடத்தப்படுகிறது.

சமீபநாட்களாக கரோனா தொற்று பாதிப்பு பெரிதும் குறைந்துவிட்டதால், இக்கூட்டங் களை ஏற்கெனவே நடத்தப்பட் டதை போல நேரடியாக நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது, விவசாயிகள் கருப்பு துணியால் கண், காதுகளை கட் டிக்கொண்டு, கைகளால் வாயை மூடிக்கொண்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.ப. சின்னதுரை தலைமை வகித் தார். மாவட்ட துணைத் தலை வர்கள் ரங்கநாதன், மணிவேல், பொருளாளர் சிங்காரம், செயலா ளர்கள் கணேசன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த ஆட்சியர் சு. சிவராசுவிடம், இந்த கோரிக்கை அடங்கிய மனுவை விவசாயிகள் அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், அரசுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதிய ளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்