செந்துறை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் பருத்தி, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே, உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

செந்துறை, குழுமூர், நமங் குணம், நக்கம்பாடி, சொக்கநாத புரம், பெருமாண்டி என செந்துறை ஒன்றி யத்துக்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,500 ஏக்கர் பரப்பளவில் மக்காச் சோளம், பருத்தி ஆகிய பயிர் களை விவசாயிகள் நடப்பாண்டு சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது செந்துறை, குழுமூர், நமங்குணம் உள்ளிட்ட பகுதி களில் கடந்த சில தினங்க ளாக பெய்த மழையால் மக்காச்சோள பயிர்கள் கீழே சாய்ந்து முளைவிடத் தொடங்கிவிட்டன. பருத்திகளும் மழைநீரில் நனைந்து வீணாகி விட்டன. பருத்தி, மக்காச்சோளத் துக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், செந்துறை பகுதியில் மக்காச் சோளத்துக்கு அதிகாரிகள் இது வரை கணக்கெடுக்கவில்லை.

தற்போது பருத்திக்கு கணக் கெடுத்து ஹெக்டேருக்கு ரூ.7,410 வழங்கவுள்ளனர். இந்தத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரியலூர் உள்ளிட்ட மற்ற வட்டாரங்களில் மக்காச்சோளத் துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்குவது போல செந்துறை பகுதிகளிலும் மக்காச்சோளத் துக்கு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘செந்துறை பகுதியில் சேதம டைந்த பருத்தி குறித்து கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. மக்காச்சோளத் துக்கு கணக்கெடுக்க அறிவிப்பு இல்லை. அரசு அறிவிக்கும் நிலையில் மக்காச்சோளத்துக்கும் கணக்கெடுக்க தயாராக உள் ளோம்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்