திருச்சி மாநகரில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டால் கால்நடை பறிமுதல் செய்யப்படுவதுடன், அதன் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என மாநகர காவல்துறை யினர் எச்சரித்துள்ளனர்.
திருச்சி மாநகர சாலைகளில் திரியும் கால்நடைகளால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நேரிடு கின்றன. இதைத்தவிர்க்கும் வகையில் மாநகரப் பகுதியில் கால்நடை வளர்ப்போருடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. போக்கு வரத்து, ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் ஆர்.வேதரத்தினம், கன்டோன்மென்ட் உதவி ஆணையர் மணிகண்டன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள், மாடு வளர்ப்போர் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநகர பகுதிக்குள் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளை தங்களுக்குச் சொந்தமான இடத் தில் வைத்து பராமரிக்க வேண் டும். சாலைகளில் அவிழ்த்து விடக் கூடாது. சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற் பட்டு, அதனால் மற்றவர்களின் உயிருக்கோ, உடல் உறுப்புக ளுக்கோ பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட கால்நடை யின் உரிமையாளரையே குற்றவாளியாக கருதி, அவர் மீது வழக்கு தொடரப்படும். காவல்துறையின் அறிவுறுத் தலுக்கு கட்டுப்பட்டு கால்நடை களை வளர்க்காவிட்டால், அந்த கால்நடைகள் பறிமுதல் செய்யப் படுவதுடன், சம்பந்தப்பட்ட உரிமை யாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மாநகரின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் நலன்கருதி கால்நடைகளை வளர்ப்போர் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத் தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago