வேலூர் அடுத்த பெருமுகையில் உள்ள அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

பெருமுகை அரசினர் ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர் பெருமுகை ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் என்பவர் ஸ்மார்ட் வகுப்பறையை அமைக் கும் பணியை முடித்துள்ளார்.

பள்ளி குழந்தைகள் குறும் படங்களை பார்த்து கல்வி கற்க ஏதுவாக எல்இடி புரஜெக்டரை பொருத்தியுள்ளதுடன் சுவர்களில் வண்ணப் படங்களும் வரையப் பட்டுள்ளன.

இந்நிலையில், ரூ.1 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு வைத்ததுடன் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், வட்டாட்சியர் ரமேஷ், சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்