பவானிசாகர் அணைப் பகுதியில் தியாகி ஈஸ்வரனுக்கு சிலை அமைக்க வேண்டும் முதல்வரிடம் த.மா.கா.வினர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணை அமையக் காரணமான தியாகி ஈஸ்வரனுக்கு அணைப்பகுதியில் சிலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் பழனிசாமியிடம் தமாகா நிர்வாகிகள் மனு அளித்தனர்.

ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த முதல்வர் பழனிசாமியிடம், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், ஈரோடு மத்திய மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கீழ்பவானி பாசன திட்டத்துக்கு வித்திட்ட தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுக்கு பவானிசாகர் மற்றும் காலிங்கராயன் இல்லத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாநகர பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகர் பகுதியில் புதிய குடிநீர் இணைப்புக்காகவும், கேபிள் மின் இணைப்புக்காகவும், பாதாள சாக்கடை திட்டத்துக்கும் தோண்டி எடுக்கப்பட்ட தார் சாலைகளை விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும். பெருந்துறை செங்கப்பள்ளி முதல் பவானி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்