ராமநாதபுரம் மாவட்டம் நயினா ர்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தொடர் மழையால் மேமங்கலம், தாளையடிக்கோட்டை, சாலிய வாகனபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஒரு சில பகுதிகளில் நிலங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற முடியாததால் நெற்பயிர்கள் அழுகின.
இது குறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், பாதிக் கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை.
இதைக் கண்டித்து மேமங்கலம், தாளையடிக்கோட்டை, சாலிய வாகனபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழுகிய நெற் பயிர்களுடன் நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக பயிர் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago