தைப்பொங்கலை முன்னிட்டு வரும் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை ஈரோட்டில் இருந்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தைப்பொங்கலை முன்னிட்டு ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ஊர்களிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, பழநி, சேலம், நாமக்கல், கரூர், சத்தியமங்கலம் மற்றும் ராசிபுரம் ஆகிய ஊர்களுக்கு வரும் 12-ம் தேதியிலிருந்து, 19-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு மார்க்கம் செல்லும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஈரோடு மண்டலம் சார்பில் தற்போது தினந்தோறும் 728 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொங்கலையொட்டி கூடுதலாக 100 பேருந்துகள் சிறப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குவதற்காக சிறப்பு இயக்கப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago