திருச்செங்கோடு அருகே மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு இயந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த தோக்கவாடி கிராமம் கவுண்டிபாளையம் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், தோக்கவாடியில் இருந்து கந்தம் பாளையம் வரை செல்லும் மின் பாதையில், மாரப்பன், செங்கோட்டையன் உள்ளிட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தில் மின்கோபுரம் அமைக்கப்படவுள்ளது. இப்பணிக்காக இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நேற்று நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இயந்திரத்தை சிறைபிடித்தனர். இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இயந்திரத்தை மீட்டுச் சென்றனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

விவசாய நிலத்தில் எங்கள் அனுமதி இல்லாமல் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மின்கோபுரப் பணி தொடர்பாக எங்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எங்கள் நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகைக்கான எந்தவிதமான உத்தரவாதக் கடிதமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் திடீரென சோளத்தட்டு, ஆமணக்கு பயிர்களை அழித்தபடி விவசாய நிலத்திற்குள் இயந்திரத்துடன் சென்று மின்கோபுரம் அமைக்க குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து இயந்திரத்தையும், ஊழியர்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டோம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்