ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வாக்காளர்பட்டியல் பார்வையாளர் மு.கருணாகரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில் புதிய வக்காளர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக 92 ஆயிரத்து 264 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
படிவங்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 21 ஆயிரத்து 229 இளம் வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 58 ஆயிரத்து 430 விண்ணப்பங்களும், வெளிநாடு வாழ் மக்கள் பெயர் சேர்க்க 3 விண்ணப்பங்களும், பெயர் நீக்கம் செய்ய 18 ஆயிரத்து 921 விண்ணப்பங்களும், பெயர் திருத்தம் மற்றும் புகைப்படங்கள் மாற்றம் செய்ய 11 ஆயிரத்து 81 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம் செய்ய 4829 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன, என்றார்.
ஆய்வின்போது ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago