பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனைமுத்து. விவசாயி. இவரது தந்தை மொட்டையன் என்பவருக்குச் சொந்தமான நிலம் எளம்பலூர் கிராம ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் உள்ளது.
மொட்டையனின் நிலத்தை, கோனேரிபாளையத்தைச் சேர்ந்த அதே பெயரைக் கொண்ட மற் றொருவரும், அவரது மகன்களும் ஆள் மாறாட்டம் செய்து, 2016-ம் ஆண்டில் பெரம்பலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பாகப் பிரிவினை பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடிக்கு, மருவத்தூர் மற்றும் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேரும், பத்திரப் பதிவு எழுத்தரும் உடந்தையாக இருந்ததாக கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் ஆனைமுத்து புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆனைமுத்து புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து, ஆள் மாறாட்டம் மூலம் நிலத்தை பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கோனேரிபாளையத்தைச் சேர்ந்த தந்தை, மகன்கள் 4 பேர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago