திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா. ஞானதிரவியம் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி, அம்பாசமு த்திரம், கீழக்கடையம், பாவூர்சத் திரம், செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு பாலருவி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.
கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது.
ஆனால், கீழக்கடையம், பாவூர்சத்திரம் ரயில் நிலையங் களில் இந்த ரயில் நின்று செல்லவில்லை. இதனால் பூ வியாபாரிகள், கேரளத்தில் பணிபுரியும் எஸ்டேட் தொழிலாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கீழக்கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ஆகியவை பெரிய பேரூராட்சி பகுதிகளாகும். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இப்பகுதிகளில் வசிக்கிறார்கள். இங்குள்ளவர்களின் வசதிக் காக கீழக்கடையம் மற்றும் பாவூர் சத்திரம் ரயில் நிலையங்களில் பாலருவி ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago