பாபநாசம் அணைப்பகுதியில் 25 மி.மீ. மழை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 25 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையில் நீர்மட்டம் 142.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,494 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,443 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 576 கனஅடி தண்ணீர் வந்தது. 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிறஅணைகளின் நீர்மட்டம் விவரம்:

சேர்வலாறு- 145.67 அடி, வடக்கு பச்சையாறு- 31 அடி, நம்பியாறு- 10.62 அடி, கொடுமுடியாறு- 27 அடி.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 25 மி.மீ. மழை பதிவானது.

ராமநதி அணையில் 15 மி.மீ., கருப்பாநதி அணையில் 6 , கடனாநதி அணை, அடவிநயினார் அணையில் தலா 5, ஆய்க்குடியில் 3.20, குண்டாறு அணை, தென்காசியில் தலா 1 மி.மீ. மழை பெய்தது.

கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 79.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 65.62 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 73.25 அடியாகவும் இருந்தது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கூட்டம் குறைவாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்