பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2020- 21-ம் கல்வியாண்டில் கலா உத்சவ் கலைப் போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டது. இதில், இலஞ்சி ராமசாமிபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவி பூர்ணிமா, இருபரிமாண ஓவியம் வரைதல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.
வல்லம் அன்னை தெரசா ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அப்துர் ரகுமான், ரபி பெனடிக், கயல்விழி, சரண்யா, பாவூர்சத்திரம் அவ்வை யார் மகளிர் மேல்நிலைப்பள்ளி நெபிஷா ராணி, தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி, மேல்நிலைப்பள்ளி கல்யாணசுந்தரம், தென்காசி புனித மிக்கேல் மகளிர் மேல்நிலைப்பள்ளி பார்கவி, சுபானு, வர்ஷா, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருண், ஆரோக்ய ராஜ், பானு, வீராணம் அரசு மேல்நிலைப்பள்ளி சுபாஷ், இலஞ்சி ராமசாமிபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி பூர்ணிமா, துளசி கண்ணன், கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோபிகா பாரதி, திருமலையப்பபுரம் கைலாசம் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுகந்தன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார். தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) சிவராஜ் , தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் ராஜன், சங்கரன்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சிதம்பரநாதன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், கலா உத்சவ் 2020 போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் ஆவுடையப்ப குருக்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வநாயகம், ஆறுமுகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago