திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைத்தோட்டத்தில் செங்கரும்பு வெட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைத் தோட்டத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் மா, பலா, வாழை, தென்னை, நெல்லி, கொய்யா போன்ற மரங்களும், தக்காளி, கத்தரி, பூசணி, முள்ளங்கி, பீன்ஸ், அவரைக்காய், புடலை, பரங்கி போன்ற காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.
மேலும், 2 ஏக்கர் பரப்பளவில் கடந்த மார்ச் மாதம் செங்கரும்பு பயிரிடப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், கரும்பு அறுவடை செய்யும் பணி நேற்று தொடங்கியது. சிறைவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொதுமக்களின் நலன் கருதியும் மொத்தமாகவும், சில்லறையாகவும் சிறை வளாகத்தில் உள்ள அங்காடியில் கரும்புகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago