தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிட்டது அதிமுக அரசு உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

மருத்துவக் கல்வி உரிமை உட்பட தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட எதுமலைச் சந்திப்பு, திருப்பைஞ்ஞீலி, வேங்கை மண்டலம், துறையூர் தொகுதியில் உள்ள அண்ணா பேருந்து நிலையச் சந்திப்பு, முத்தையன்பாளையம், நாகலாபுரம் ஆகிய இடங்களில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

வேங்கை மண்டலம் கிராமத்தில் அவர் பேசியது:

முதல்வர் உட்பட அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியின்போது திமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி வழக்குகள் போடப்பட்டன. ஆனால், எதையும் நிரூபிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் ஜெயலலிதாவும், சசிகலாவும்தான்.

மருத்துவக் கல்வி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அதிமுக அரசு விட்டுக் கொடுத்துவிட்டது.

புயல் பாதிப்பு நிவாரணத்துக்காக ரூ.10,500 கோடியை தமிழ்நாடு அரசு கேட்டதற்கு, மத்திய அரசு ரூ.1,500 கோடி மட் டுமே அளித்தது.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்வதில்லை. ஆனால், மத்திய அரசு கூறுவதைக் கேட்டு முதல்வரும், துணை முதல்வரும் செயல்படுகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை அளித்ததுபோல, வரும் தேர்தலிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்