கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவில் கடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளிலும் ஆறுபோல மழை நீர் ஓடியது. முஷ்ணம் , சிதம்பரம்,பண்ருட்டி காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது.காட்டுமன் னார்கோவில் பகுதியில் ரெட்டியூர், ஆயங்குடி, குமராட்சி பகுதியில் எடையார், நடுத்திட்டு, செங்கழுனிர்பள்ளம், வவ்வால் தோப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கருக்கு நெற் பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளன. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் சாய்ந்த பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,". கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளோம். அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிக ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்தால் ஓரளவுக்கு நாங்கள் தப்பிக்கலாம்"என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்