வீடூர் அணை இன்று திறப்பு

By செய்திப்பிரிவு

வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை அமைச்சர் சி.வி. சண்முகம், ஆட்சியர் அண்ணாதுரை முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதன் மூலம் தமிழக பகுதிகளான வீடூர், சிறுவை, பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாகுப்பம் கிராமங்களில் உள்ள 2,200 ஏக்கர் நிலங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுக்குப்பம், லிங்கா ரெட்டிப்பாளையம்,கடடியான் குப்பம், சுத்துக்கேணி, தெத்தாம்பாக்கம் கிராமங்களில் உள்ள 1,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இன்று முதல் வருகிற மே மாதம் 22-ம் தேதிவரை, அதாவது 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படும். இத்தகவலை விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்