பள்ளி மாணவிக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நாடு முழுவதும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதுமுறை கண்டுபிடிப்பு போட்டி நடத்தப்படுகிறது.

இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 1,371 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ச.துர்காதேவியின் தொடர்பு இல்லாத வெப்பமானி என்ற புதிய யோசனையை அங்கீகரித்து மத்திய அரசு ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளது.

இந்த தொகையைப் பயன்படுத்தி தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்த தயார் செய்துகொண்டு இருக்கிறார். மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஞ்சுசெல்வம், பள்ளி செயலாளர் சு.செல்லம்மாள், துணைச் செயலாளர் ஆ.பொ.ஆறுமுகசெல்வன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் உஷாராணி ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்